70. மன்னரைச் சேர்ந்தொழுகல் - Conduct in the Presence of the King |
| 1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார். | Who warm them at the five draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.
| 691 | |
| 2. மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். | To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies.
| 692 | |
| 3. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. | Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rare.
| 693 | |
| 4. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியார் அகத்து. | All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess.
| 694 | |
| 5. எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. | Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear!
| 695 | |
| 6. குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். | Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare.
| 696 | |
| 7. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். | Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard.
| 697 | |
| 8. இளையர் இனமுறையர் என்று இகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். | Say not, 'He's young, my kinsman, 'despising thus your king; But reverence the glory kingly state doth bring.
| 698 | |
| 9. கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாதசெய்யார் துளக்கு அற்ற காட்சியவர். | 'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view.
| 699 | |
| 10. பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். | Who think' We're ancient friends, ' and do unseemly things; To these familiarity sure ruin brings.
| 700 | |
|
|