145

72. அவை அறிதல் - The Knowledge of the Council Chamber
 

1. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்.

Men pure in heart, who know of words the varied force,
Should to their audience known adapt their well - arranged discourse.

711
 
 

2. இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மையவர்.

Good men to whom the arts of eloquence are known,
Should seek occasion meet, and say what well they've made their own.

712
 
 

3. அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல்.

Unversed in councils, who essays to speak,
Knows not the way of suasive words, - and all is weak.

713
 
 

4. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!

714
 
 

5. நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

Midst all good things the best is modest grace,
That speaks not first before the elders' face.

715
 
 

6. ஆற்றின் நிலைதளர்ந்து அற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு.

As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.

716
 
 

7. கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

The learning of the learned sage shines bright,
To those whose faultless skill can value it aright.

717
 
 

8. உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று.

To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!

718
 
 

9. புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்
நன்கு செலச் சொல்லுவார்.

In councils of the good, who speak good things with penetrating power,
In councils of the mean, let them say nought e'en in oblivious hour.

719
 
 

10. அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம்கணத்தர்
அல்லார் முன்கோட்டி கொளல்.

Ambrosia in the sewer spilt, is word,
Spoken in presence of the alien herd.

720