73. அவை அஞ்சாமை - Not to dread the Council |
| 1. வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் | Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse.
| 721 | |
| 2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். | Who what they've learned, in penetrating words have learned to say, Before the learn'd among the learn'd most learn'd are they.
| 722 | |
| 3. பகை அகத்துச் சாவார் எளியர் அரியர் அவை அகத்து அஞ்சாதவர். | Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found.
| 723 | |
| 4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். | What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you more.
| 724 | |
| 5. ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. | By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt reply.
| 725 | |
| 6. வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண் அவை அஞ்சுபவர்க்கு. | To those who lack the hero's eye what can the sword avail? Or science what, to those before the council keen who quail?
| 726 | |
| 7. பகை அகத்துப் பேடிகை ஒள்வாள் அவை அகத்து அஞ்சும் அவன் கற்றநூல். | As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears.
| 727 | |
| 8. பல்லவை கற்றும் பயமிலரே நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார். | Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall.
| 728 | |
| 9. கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார். | Who, though they've learned before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take.
| 729 | |
| 10. உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார். | Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they.
| 730 | |
|
|