149
3. அங்கவியல் - The Essentials of A State |
| 1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச் செல்வரும் சேர்வது நாடு. | where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land'.
| 731 | |
| 2. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகிஅரும் கேட்டால் ஆற்ற விளைவது நாடு. | That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare.
| 732 | |
| 3. பொறைஒருங்கு மேல்வரும் கால்தாங்கி இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு. | When burthens press, it bears; yet, with unfailing hand, To king due tribute pays: that is the land.
| 733 | |
| 4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. | That is a land whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
| 734 | |
| 5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. | From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the land.
| 735 | |
| 6. கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா நாடுஎன்ப நாட்டின் தலை. | Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase.
| 736 | |
| 7. இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. | Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress sure defence.
| 737 | |
| 8. பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம்ஏமம் அணிஎன்ப நாட்டிற்கு இவ்ஐந்து. | A country's jewels are these five: unfailing health, Fertility and joy, a sure defence, and wealth.
| 738 | |
| 9. நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு. | That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought. | 739 | |
| 10. ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு. | Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace.
| 740 | |
|
|