15

8. அன்புடைமை - The Possession of Love
 

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.

71
 
 

2. அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

The loveless to themselves belong alone;
The loving men are other's to the very bone.

72
 
 

3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

73
 
 

4. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை: அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு

From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

74
 
 

5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.

75
 
 

6. அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

76
 
 

7. என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்.

As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.

77
 
 

8. அன்பு அகத்து இல்லாஉயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று.

The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

78
 
 

9. புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு.

Though every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?

79
 
 

10. அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

80