151

75. அரண் - The Fortification
 

1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.

A fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.

741
 
 

2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.

A fort is that which owns a fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.

742
 
 

3. உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கின்
அமைவு அரண் என்றுஉரைக்கும் நூல்.

Height, breadth, strength, difficult access;
Science declares a fort must these possess.

743
 
 

4. சிறுகாப்பில் பேர்இடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.

A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman's energy.

744
 
 

5. கொளற்கு அரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிதாம் நீரது அரண்.

Impregnable, containing ample stores of food,
A fort, for those within, must be a warlike station good.

745
 
 

6. எல்லாப்பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல்ஆள் உடையது அரண்.

A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.

746
 
 

7. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.

A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.

747
 
 

8. முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

Howe'er the circling foe may strive access to win,
A fort should give the victory to those who guard within.

748
 
 

9. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறு எய்தி மாண்டது அரண்.

At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.

749
 
 

10. எனைமாட்சித்து ஆகிய கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.

750