76. பொருள் செயல்வகை - Way of Accumulating Wealth |
| 1. பொருள் அல்லவரைப் பொருள் ஆகச் செய்யும் பொருள் அல்லது இல்லைபொருள். | Nothing exists, save wealth, that can Change man of nought to worthy man.
| 751 | |
| 2. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. | Those who have nought all will despise; All raise the wealthy to the skies.
| 752 | |
| 3. பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. | Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's command.
| 753 | |
| 4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள். | Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight.
| 754 | |
| 5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம் புல்லார் புரள விடல். | Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace.
| 755 | |
| 6. உறுபொருளும் உல்குபொருளும் தன்ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். | Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues, The spoils of slaughtered foes: these are the royal revenues.
| 756 | |
| 7. அருள் என்னும் அன்பு ஈன்குழவிபொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு. | 'Tis love that kindliness as offspring bears; And wealth as bounteous nurse the infant rears.
| 757 | |
| 8. குன்றுஏறி யானைப்போர் கண்டு அற்றால் தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. | As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his hand.
| 758 | |
| 9. செய்க பொருளைச் செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு அதனில் கூரியது இல். | Make money! Foeman's insolence o'er grown, To lop away no keener steel is known.
| 759 | |
| 10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. | Who plenteous store of glorious wealth have gained; By them the other two are easily obtained.
| 760 | |
|
|