77. படை மாட்சி - The Excellence of an Army |
| 1. உறுப்பு அமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. | A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest found. | 761 | |
| 2. உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவு இடத்துத் தொல் படைக்கு அல்லால் அரிது. | In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can show. | 762 | |
| 3. ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். | Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they die!
| 763 | |
| 4. அழிவுஇன்றி அறைபோகாது ஆகி வழிவந்த வன்கண் அதுவே படை. | That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed. | 764 | |
| 5. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை. | That is a 'host' that joins its ranks, and mightily with stands, Though death with sudden wrath should fall upon its bands. | 765 | |
| 6. மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. | Valour with honour, sure advance in glory's path with confidence; To warlike host these four are sure defence. | 766 | |
| 7. தார் தாங்கிச் செல்வதுதானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. | A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes.
| 767 | |
| 8. அடற்றகையும் ஆற்றலும் இல்எனினும் தானை படைத் தகையால் பாடு பெறும். | Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled.
| 768 | |
| 9. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. | Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory. | 769 | |
| 10. நிலைமக்கள் சால உடைத்து எனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். | Though men abound, all ready for the war, No army is where no fit leaders are.
| 770 | |
|
|