157

78. படைச் செருக்கு - Military Spirit
 

1. என்னைமுன் நில்லன்மின் தெவ்வீர் பலர் என்ஐ
முன்நின்று கல் நின்றவர்.

Ye foes! Stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!

771
 
 

2. கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது.

Who aims at elephant, though dart should fail, has greater praise,
Than he who woodland hare with winged arrow slays.

772
 
 

3. பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு.

Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.

773
 
 

4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.

774
 
 

5. விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஒட்டு அன்றோ வன்கணவர்க்கு.

To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.

775
 
 

6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து.

The heroes, counting up their days, set down as vain;
Each day when they no glorious wound sustain.

776
 
 

7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.

777
 
 

8. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls.

778
 
 

9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?

779
 
 

10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

If monarch's eyes o'erflow with tears for hero slain,
Why would not beg such boon of glorious death to gain?

780