| 1. செயற்குஅரிய யாஉள நட்பின் அதுபோல் வினைக்குஅரிய யாஉள காப்பு. | What so hard for men to gain as freindship true? What so sure defence 'gainst all that foe can do?
| 781 | |
| 2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. | Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
| 782 | |
| 3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. | Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good.
| 783 | |
| 4. நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேல்சென்று இடித்தல் பொருட்டு. | Nor for laughter only friendship all the pleasant day. But for strokes of sharp reproving, when from right you stray.
| 784 | |
| 5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்புஆம் கிழமை தரும். | Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mind.
| 785 | |
| 6. முகநக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. | Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near.
| 786 | |
| 7. அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. | Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.
| 787 | |
| 8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. | As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay.
| 788 | |
| 9. நட்பிற்கு வீற்றுஇருக்கை யாதுஎனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. | And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may find.
| 789 | |
| 10. இனையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்என்னும் நட்பு. | Mean is the friendship that men blazon forth, 'He's thus to me,'and such to him my worth.
| 790 | |
|
|