161

80. நட்பாராய்தல் - Investigation in forming Friendship
 

1. நாடாது நட்டலில் கேடுஇல்லை நட்டபின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு.

To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.

791
 
 

2. ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.

792
 
 

3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்து யாக்க நட்பு.

Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.

793
 
 

4. குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

Who,born of noble race, from guilt would shrink with shame,
Pay any price, so you as friend that man may claim.

794
 
 

5. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.

Make them your chosen friends whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.

795
 
 

6. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதுஒர் கோல்.

Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.

796
 
 

7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

'Tis gain to any man, the sages say,
Friendship of folls to put away.

797
 
 

8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு.

Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.

798
 
 

9. கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.

Of friends deserting us on ruin's brink,
'Tis torture e'en in life's last hour to think.

799
 
 

10. மருவுக மாசுஅற்றார் கேண்மை ஒன்றுஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

Cling to the friendship of the spotless ones;whate'er you pay,
Renounce alliance with the men of evil way.

800