| 1. பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும் கிழமையைக் கீழ்ந்து இடாநட்பு. | Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act.
| 801 | |
| 2. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று அதற்கு உப்பு ஆதல் சான்றோர் கடன். | Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise.
| 802 | |
| 3. பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை செய்து ஆங்கு அமையாக் கடை. | When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use?
| 803 | |
| 4. விழை தகையான் வேண்டிஇருப்பர் கெழுதகையால் கேளாது நட்டார் செயின். | When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly part.
| 804 | |
| 5. பேதமை ஒன்றோ பெரும்கிழமை என்று உணர்க நோதக்க நட்டார் செயின். | Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress.
| 805 | |
| 6. எல்லைக் கண்நின்றார் துறவார் தொலைவு இடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. | Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends.
| 806 | |
| 7. அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். | True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betrays.
| 807 | |
| 8. கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின். | In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear.
| 808 | |
| 9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடா அர் விழையும் உலகு. | Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commends.
| 809 | |
| 10. விழையார் விழையப்படுப பழையார் கண் பண்பின் தலைப் பிரியாதார். | III-wishers even wish them well, who guard, For ancient friends, their wonted kind regard.
| 810 | |
|
|