165

82. தீ நட்பு - Evil Friendship
 

1. பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலில் குன்றல் இனிது.

Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow.

811
 
 

2. உறின்நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?

812
 
 

3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

These are alike: the friends who ponder friendship's gain,
Those who accept what'er you give, and all the plundering train.

813
 
 

4. அமர்அகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.

814
 
 

5. செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.

815
 
 

6. பேதை பெரும்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதுஇன்மை கோடி உறும்.

Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.

816
 
 

7. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்.

From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughters vain.

817
 
 

8. ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்ஆடார் சோர விடல்.

Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.

818
 
 

9. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.

819
 
 

10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.

820