| 1. பேதைமை என்பது ஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். | What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claim!
| 831 | |
| 2. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கைஅல்ல தன்கண் செயல். | 'Mid follies chiefest folly is to fix your love On deeds which to you station unbefitting prove.
| 832 | |
| 3. நாணாமை நாடாமை நாரின்மை யாதுஒன்றும் பேணாமை பேதை தொழில். | Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the foll will play his part.
| 833 | |
| 4. ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்தான் அடங்காப் பேதையின் பேதையார் இல். | The sacred law he reads and learns, to other men expounds,- Himself obeys not: where can greater fool be found?
| 834 | |
| 5. ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. | The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birth.
| 835 | |
| 6. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். | When fool some task attempts with uninstructed pains, It fails; nor that alone, himself he binds with chains.
| 836 | |
| 7. ஏதிலார் ஆரத்தமர் பசிப்பர் பேதை பெருஞ் செல்வம் உற்றக்கடை. | When fools are blessed with fortune's bounteous store, Their foes feed full, their friends are prey to hunger sore.
| 837 | |
| 8. மையல் ஒருவன் களித்து அற்றால் பேதைதன் கைஒன்று உடைமை பெறின். | When folly's hand grasps wealth's increase, 'twill be As when a mad man raves in drunken glee.
| 838 | |
| 9. பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவது ஒன்றுஇல். | Friendship of fools is very pleasant thing; Parting with them will leave behind no sting
| 839 | |
| 10. கழாக்கால் பள்ளியுள்வைத்து அற்றால் சான்றோர் குழாத்துப் பேதை புகல். | Like him who seeks his couch with unwashed feet, Is fool whose foot intrudes where wise men meet.
| 840 | |
|
|