175

87. பகைமாட்சி - The Might of Hatred
 

1. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.

861
 
 

2. அன்புஇலன் ஆன்றதுணைஇலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?

862
 
 

3. அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.

863
 
 

4. நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

His wrath still blazes, every secret told; each day
This man's in every place to every foe an easy prey.

864
 
 

5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது.

No way of right he scans, no precepts blind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.

865
 
 

6. காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

866
 
 

7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை.

Unseemly are his deeds, yet, proffering aid, the man draws nigh;
His hate-'tis cheap at any price-be sure to buy!

867
 
 

8. குணன்இலனாய்க் குற்றம்பல ஆயின் மாற்றார்க்கு
இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து.

No gracious gifts he owns, faults many cloud his fame:
His foes rejoice, for none with kindred claim.

868
 
 

9. செறுவார்க்கு சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes.

869
 
 

10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.

The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more.

870