177

88. பகைத்திறம் தெரிதல் - Knowing the Quality of Hate
 

1. பகை என்னும் பண்புஇல் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

For Hate, that ill-conditioned thing, not e'en in jest,
Let any evil longing rule your breast.

871
 
 

2. வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை.

Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!

872
 
 

3. ஏமுற்ற வரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகை கொள்பவன்.

Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.

873
 
 

4. பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

874
 
 

5. தன்துணை இன்றால் பகைஇரண்டால்தான் ஒருவன்
இன்துணையாக் கொள்க அவற்றின் ஒன்று.

Without ally, who flights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.

875
 
 

6. தேறினும் தேறாவிடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.

876
 
 

7. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.

877
 
 

8. வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.

878
 
 

9. இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that pluck it thence.

879
 
 

10. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்க லாதார்.

But breathe upon them, an they surely die,
Who fail to tame the pride of angry enemy.

880