91. பெண்வழிச் சேறல் - Being led by Women |
| 1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. | Who give their soul to love of wife acquire not nobler gain: Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
| 901 | |
| 2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். | Who gives himself to love of wife, careless of noble name, His wealth will clothe him with o'erwhelming shame.
| 902 | |
| 3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். | Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good.
| 903 | |
| 4. மனையாளை அஞ்சும் மறுமை இல் ஆளன் வினைஆண்மை வீறுஎய்தல் இன்று. | No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought.
| 904 | |
| 5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். | Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do.
| 905 | |
| 6. இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சுபவர். | Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender arm.
| 906 | |
| 7. பெண்ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண்உடைப் பெண்ணே பெருமை உடைத்து. | The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells.
| 907 | |
| 8. நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். | Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform.
| 908 | |
| 9. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். | No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests.
| 909 | |
| 10. எண்சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found.
| 910 | |
|
|