92. வரைவின் மகளிர் - Wanton Women |
| 1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். | Those that choice armlets wear, who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove.
| 911 | |
| 2. பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்பு இல் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். | Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart.
| 912 | |
| 3. பொருள் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇ அற்று. | As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charms.
| 913 | |
| 4. பொருள் பொருளார் புல்நலம் தோயார் அருள்பொருள் ஆயும் அறிவி னவர். | Their worthless charms, whose only weal is wealth of gain, Form touch of these the wise, who seek the wealth of grace, abstain.
| 914 | |
| 5. பொதுநலத்தார் புல்நலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். | From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee.
| 915 | |
| 6. தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புல்நலம் பாரிப்பார் தோள். | From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would thier own true good maintain will turn away.
| 916 | |
| 7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின் பேணிப் புணர்பவர் தோள். | Who cherish alien thoughts while foldding in their feigned embrace, These none approach save those devoid of virtue's grace.
| 917 | |
| 8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப மாய மகளிர் முயக்கு. | As demoness who lures to ruin, woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove.
| 918 | |
| 9. வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப் பூரியர்கள் ஆழும் அளறு. | The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell,where sink degraded souls of men abject.
| 919 | |
| 10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. | Women of double minds, strong drink, and dice to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more.
| 920 | |
|
|