93. கள்ளுண்ணாமை - Not Drinking Palm Wine |
| 1. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கள்காதல் கொண்டு ஒழுகுவார். | Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades away.
| 921 | |
| 2. உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான் எண்ணப்பட வேண்டா தார். | Drink not inebriating draught. Let him count well the cost. Who drinks by drinking, all good men's esteem is lost.
| 922 | |
| 3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. | The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise?
| 923 | |
| 4. நாண்என்னும் நல்லாள் புறம் கொடுக்கும் கள் என்னும் பேணாப் பெருங் குற்றதார்க்கு. | Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn.
| 924 | |
| 5. கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல். | With gift of goods who self-oblivion buys, Is ignorant of all that man should prize.
| 925 | |
| 6. துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர். | Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they position quaff, we deem.
| 926 | |
| 7. உள்ஒற்றி உள்ஊர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண் சாய்பவர். | Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy.
| 927 | |
| 8. களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். | No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad.
| 928 | |
| 9. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. | Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave, Is he who strives to sober drunken man with reasonings grave.
| 929 | |
| 10. கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. | When one, in sober interval a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'?
| 930 | |
|
|