10. இனியவை கூறல் - The Utterance of Pleasant Words |
| 1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல். | Pleasant words are words with all prevading love that burn; Words from his guileless mouth who can the very truth discern.
| 91 | |
| 2. அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred.
| 92 | |
| 3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொல் இனிதே அறம். | With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity.
| 93 | |
| 4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு. | The men of pleasant speech that gladness-breathe around, Through indigence shall never sorrow's prey be found.
| 94 | |
| 5. பணிவுஉடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. | Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth.
| 95 | |
| 6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow.
| 96 | |
| 7. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் | The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yeild in every sphere.
| 97 | |
| 8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் | Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart.
| 98 | |
| 9. இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ வன் சொல் வழங்குவது | Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words?
| 99 | |
| 10. இனியுளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று. | When pleasant word are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
| 100 | |
|
|