| 1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. | The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail, it will cause disease.
| 941 | |
| 2. மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். | No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again.
| 942 | |
| 3. அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு. | Who has a body gained may long the gift retain, If, food disgested well, in measure due he eat again.
| 943 | |
| 4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல துய்க்க துவரப் பசித்து. | Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree.
| 944 | |
| 5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. | With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel.
| 945 | |
| 6. இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான் கண்நோய். | On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure.
| 946 | |
| 7. தீஅளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோய்அளவு இன்றிப் படும். | Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains.
| 947 | |
| 8. நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். | Disease, its cause, what may abate the ill; Let leech examine these, then use his skill.
| 948 | |
| 9. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். | The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill.
| 949 | |
| 10. உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று அப்பால் நால்கூற்றே மருந்து. | For patient, leech, and remedies and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide.
| 950 | |
|
|