193
4. ஒழிபியல் - APPENDIX |
| 1. இல்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பு ஆகச் செப்பமும் நாணும் ஒருங்கு. | Save in the scions of a noble house, you never find Instinctive sense of right and virtuous shame combined.
| 951 | |
| 2. ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். | In these three things the men of noble birth fail not; In virtuous deed and truthful word, and chastened thought.
| 952 | |
| 3. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. | The smile, the gift, the pleasant word, unfailing courtesy: These are the signs, they say, of true nobility.
| 953 | |
| 4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். | Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin.
| 954 | |
| 5. வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. | Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace.
| 955 | |
| 6. சலம்பற்றி சால்புஇல செய்யார் மாசுஅற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார். | Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame.
| 956 | |
| 7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. | The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky.
| 957 | |
| 8. நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். | If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim.
| 958 | |
| 9. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல். | Of soil the plants that spring thereout will show the worth; The words they speak declare the men of noble birth.
| 959 | |
| 10. நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. | Who seek for good the grace of virtuous shame must know; Who seek for noble name to all must reverence show.
| 960 | |
|
|