| 1. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். | Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain.
| 961 | |
| 2. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேர் ஆண்மை வேண்டு பவர். | Who seeks with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name.
| 962 | |
| 3. பெருக்கத்து வேண்டும் பணிதல், சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. | Bow down thy soul, with increase blest, in happy hour, Lift up thy heart, when stript of all by fortune's power.
| 963 | |
| 4. தலையின் இழிந்த மயிர் அனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. | Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth.
| 964 | |
| 5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். | If meanness. slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought.
| 965 | |
| 6. புகழ்இன்றால்; புத்தேள் நாட்டு உய்யாதால், என் மற்று இகழ்வார்பின் சென்று நிலை. | It yields no praise, nor to the land of Gods throws wide the gate; Why follow men who scron, and at their bidding wait?
| 966 | |
| 7. ஒட்டார்பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. | Better 'twere said, 'He perished!' than to gain The means to live, following in foeman's train.
| 967 | |
| 8. மருந்தோ மற்று ஊன் ஓம்பும்வாழ்க்கை பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து. | When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweet?
| 968 | |
| 9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். | Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.
| 969 | |
| 10. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. | Who , when dishonour comes, refuse to live, their honoured memory Will live in worship and applause of all the world for aye!
| 970 | |
|
|