197

98. பெருமை - Greatness
 

1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

The light of life is mental energy; disgrace is his
Who say's 'I ill lead a happy life deviod of this.'

971
 
 

2. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமையான்.

All men that live are one in circumstances of birth,
Diversities of works give each his special worth.

972
 
 

3. மேல்இருந்தும் மேல்அல்லார் மேல் அல்லர் கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் அவர்.

The men of lofty line, whose souls are mean, are never great;
The men of lowly birth, when high of soul, are not of low estate.

973
 
 

4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத் தான் கொண்டு ஒழுகின் உண்டு.

Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.

974
 
 

5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.

975
 
 

6. சிறியார் உணர்ச்சியுள் இல்லைப் பெரியாரைப்
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.

'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.

976
 
 

7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரஅல் அவர்கண் படின்.

Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.

977
 
 

8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.

978
 
 

9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.

979
 
 

10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.

980