199

99. சான்றாண்மை - Perfectness
 

1. கடன்என்ப நல்லவை எல்லாம், கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

All goodly things are duties to the men, they say,
Who set themselves to walk in virtue's perfect way.

981
 
 

2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.

982
 
 

3. அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்.

Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting place.

983
 
 

4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

The type of 'penitence' is virtuous good that nothing slays.
To speak no ill of other men is perfect virtue's praise.

984
 
 

5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.

985
 
 

6. சால்பிற்குக் கட்டளை யாதுஎனில் தோல்வி
துலைஅல்லார் கண்ணும் கொளல்.

What is perfection's test? the equal mind,
To bear repulse from ever meaner men resigned.

986
 
 

7. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

What fruit doth your perfection yield you say!
Unless to men who work you ill good repay?

987
 
 

8. இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்.

To soul with Perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.

988
 
 

9. ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.

989
 
 

10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.

The mighty earth its burthen to sustain must cease,
If perfect virtue of the perfect men decrease.

990