100. பண்புடைமை - Courtesy |
| 1. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. | Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way.
| 991 | |
| 2. அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்இரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு. | Benevolence and high-born dignity, These two are beaten paths of courtesy.
| 992 | |
| 3. உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு. | Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true.
| 993 | |
| 4. நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு பாராட்டும் உலகு. | Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence'
| 994 | |
| 5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புஉள பாடு அறிவார் மாட்டு. | Contempt is evil though in sport. They sho man's nature know, E'en in their warth, a courteous mind will show.
| 995 | |
| 6. பண்புஉடையார்ப்பட்டு உண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். | The world abides; for 'worthy' men its weight sustain. Were it not so , 't would fall to dust again.
| 996 | |
| 7. அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர். | Though sharp their wit as file, as blocks they must remain, Whose souls are void of 'courtesy humane'.
| 997 | |
| 8. நண்பு ஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை. | Though men with all unfriendly acts and worngs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail.
| 998 | |
| 9. நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம் பகலும்பால் பட்டன்று இருள். | To him who knows how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
| 999 | |
| 10. பண்புஇலான் பெற்ற பெரும்செல்வம் நன்பால் கலம் தீமையால் திரிந்து அற்று. | Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man's unopened coffers stored.
| 1000 | |
|
|