101. நன்றியில் செல்வம் - Wealth without Benefaction |
| 1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான் செத்தான் செயக் கிடந்தது இல். | Who fills his house with ample store, enjoying none. Is dead, Nought with the useless heap is done.
| 1001 | |
| 2. பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் மருளான் ஆம்மாணாப் பிறப்பு. | Who giving nought, opines from wealth all blessings springs, Degraded birth that doting miser's folly brings.
| 1002 | |
| 3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. | Who lust to heap up wealth, but glory hold not dear, It burthens earth when on the stage of being they appear.
| 1003 | |
| 4. எச்சம் என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். | Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray?
| 1004 | |
| 5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடி உண்டாயினும் இல். | Amid accumulated millions they are poor, Who nothing give and nought enjoy of all they store.
| 1005 | |
| 6. ஏதம் பெருஞ் செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான். | Their ample wealth is misery to men of churlish heart, Who nought themseleves enjoy, and nought to worthy men inpart.
| 1006 | |
| 7. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள் மூத்து அற்று. | Like woman fair in lonelihood who aged grows, Is wealth of him on needy men who nought bestows.
| 1007 | |
| 8. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சுமரம் பழுத்து அற்று. | When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
| 1008 | |
| 9. அன்பு ஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். | Who love abandon, self afflict, and virtu's way forsake To heap up glittering wealth, their hoards shall others take.
| 1009 | |
| 10. சீர்உடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந்து அனையது உடைத்து. | 'Tis as when rain-cloud in the heaven grows dry, When generous wealthy man endures brief poverty.
| 1010 | |
|
|