| 1. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. | To shrink abashed from evil deed is 'generous shame'; Other is that of bright-browed ones of virtuous fame.
| 1011 | |
| 2. ஊண்உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறுஅல்ல நாண் உடைமை மாந்தர் சிறப்பு. | Food, clothing and other things alike all beings own; By sense of shame the excellence of men is known.
| 1012 | |
| 3. ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு. | All spirits homes of flesh as habitation claim, And perfect virtue ever dwells with shame.
| 1013 | |
| 4. அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் பிணி அன்றோ பீடுநடை. | And is not shame an ornament to men of dignity? Without it step of stately pride is piteous thing to see.
| 1014 | |
| 5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. | As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their own.
| 1015 | |
| 6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். | Unless the hedge of shame inviolate remain, For men of lofty soul the earth's vast realms no charms retain.
| 1016 | |
| 7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர். | The men of modest soul for shame would life an offering make, But ne'er abandon virtuous shame for life's dear sake.
| 1017 | |
| 8. பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து. | Though know'st no shame, while all around ashamed must be; Virtue will shrink away ashamed of thee!
| 1018 | |
| 9. குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும் நாண்இன்மை நின்றக் கடை. | 'Twill race consume if right observance fail; 'Twill every good consume if shamelessness prevail.
| 1019 | |
| 10. நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று. | 'Tis as with strings a wooden puppet apes life's functions, when Those void of shame within hold intercourse with men.
| 1020 | |
|
|