207

103. குடிசெயல்வகை - The Way of Maintaining the Family
 

1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்.

Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.

1021
 
 

2. ஆள்வினையும் ஆன்ற அறிவும்என இரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line

1022
 
 

3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத்தான் முந்து உறும்.

'I'II make my race renowned', if man shall say,
With vest succinct the goddess leads the way.

1023
 
 

4. சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

Who labours for his race with unremitting pain,
Without a thought, spontaneously, his end will gain.

1024
 
 

5. குற்றம்இலன் ஆய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றம் ஆச்சுற்றும் உலகு.

With blameless life who seeks to build his race's fame,
The world shall circle him, and kindred claim.

1025
 
 

6. நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல்.

Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.

1026
 
 

7. அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong.

1027
 
 

8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்.

Wait for no season, when you would your house uprear;
'Twill perish, if you wait supine, or hold your honour dear.

1028
 
 

9. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

Is not his body vase that various sorrows fill,
Who would his household screen from every ill?

1029
 
 

10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல்ஆள் இலாத குடி.

When trouble the foundation saps the house must fall,
If no strong hand be nigh to prop the tottering wall.

1030