| 1. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. | Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem.
| 1031 | |
| 2. உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. | The ploughers are the linch-pin of the world; they bear Them up who other works perform, too weak its toils to share.
| 1032 | |
| 3. உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம் தொழுதுஉண்டு பின் செல்பவர். | Who ploughing eat their food, they truly live; The rest to others bend subservient, eating what they give.
| 1033 | |
| 4. பலகுடை நீழலும் தன்குடைக்கீழ்க் காண்பர் அலகு உடை நீழலவர் | O'er many a land they'll see their monarch reign, Whose fields are shaded by the waving grain.
| 1034 | |
| 5. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது கைசெய்து ஊண்மாலை அவர். | They nothing ask from others, but to askers give, Who raise with thier own hands the food on which they live.
| 1035 | |
| 6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை. | For those who've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground.
| 1036 | |
| 7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும் வேண்டாது சாலப் படும். | Reduce your soil to that dry state When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure.
| 1037 | |
| 8. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றுஅதன் காப்பு. | To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now.
| 1038 | |
| 9. செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும். | When master from the field aloof hath stood; Then land will sulk , like wife in angry mood.
| 1039 | |
| 10. இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும். | The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty.
| 1040 | |
|
|