| 1. இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னாதது. | You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone.
| 1041 | |
| 2. இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். | Malefactor matchless! poverty destroys This world's and the next world's joys.
| 1042 | |
| 3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகைஆக நல்குரவு என்னும் நசை. | Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fame.
| 1043 | |
| 4. இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும். | From penury will spring, 'mid even those of noble race, Oblivion that gives birth to words that bring disgrace.
| 1044 | |
| 5. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். | From poverty, that grievous woe, Attendant sarrows plenteous grow.
| 1045 | |
| 6. நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்பொருள் சோர்வு படும். | Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away.
| 1046 | |
| 7. அறம்சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும். | From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face.
| 1047 | |
| 8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. | And will it come today as yesterday, The grief of want that eats my soul away?
| 1048 | |
| 9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதுஒன்றும் கண்பாடு அரிது. | Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose.
| 1049 | |
| 10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. | Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to die.
| 1050 | |
|
|