107. இரவச்சம் - The Dread of Mendicancy |
| 1. கரவாது உவந்து ஈயும் கண்அன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். | Ten million-fold 'tis greater gain, asking no alms to live, Even from those, like eyes in worth, who nought concealing gladly give.
| 1061 | |
| 2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான். | If he that shaped the world desires that men should begging go, Through life's long course. let him a wanderer be and perish so.
| 1062 | |
| 3. இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வன்பாட்டது இல். | Nothing is harder than the hardness that will say, The plague of penury by asking alms we'll drive away.
| 1063 | |
| 4. இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு. | Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth.
| 1064 | |
| 5. தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல். | Nothing is sweeter than to taste the toil-won cheer, Though mess of pottage as tastless as the water clear.
| 1065 | |
| 6. ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். | E'en if a draught of water for a cow you ask, Nought's so distaseful to the tongue as beggar's task.
| 1066 | |
| 7. இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. | One thing I beg of beggars all ,'If beg ye may, Of those who hide their wealth , beg not , I pray.
| 1067 | |
| 8. இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்குவிடும். | The fragile bark of beggary Wrecked on denial's rock will lie.
| 1068 | |
| 9. இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். | The heart will melt away at thought of beggary; With thought of stern repulse 'twill perish utterly.
| 1069 | |
| 10. கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்ஆடப் போஓம் உயிர். | E'en as he asks, the shamefaced asker dies; Where shall his spirit hide who help denies?
| 1070 | |
|
|