217

108. கயமை - Baseness
 

1. மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.

The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them i've never seen.

1071
 
 

2. நன்று அறிவாரில் கயவர் திருஉடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

Than those of greatful heart the base must luckier be,
Their minds from every anxious thought are free!

1072
 
 

3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்து ஒழுகலான்.

The base are as the gods; they too
Do ever what they list to do!

1073
 
 

4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

When base men those behold of conduct vile,
They straight surpass them and exulting smile,

1074
 
 

5. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

Fear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail.

1075
 
 

6. அறைபறை அன்னர் கயவர் தாம்கேட்ட
மறைபிறர்க்கு உய்த்து உரைக்கலான்.

The base are like the beaten drum; for when they hear,
The sound the secret out in every neighbour's ear.

1076
 
 

7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

From off their moistened hands no clinging grain they shake,
Unless to those with clenched fist their jaws who break.

1077
 
 

8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

1078
 
 

9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக் காணவற்று ஆகும் கீழ்.

If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?

1079
 
 

10. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து

For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!

1080