23

12. நடுவுநிலைமை - Impartiality
 

1. தகுதிஎன ஒன்று நன்றே பகுதியால்
பால்பட்டு ஒழுகப் பெறின்

If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.

111
 
 

2. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.

112
 
 

3. நன்றே தரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்

Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain!

113
 
 

4. தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப் படும்

Who just or unjust, lived shall soon appear;
By each one's offspring shall the truth be clear.

114
 
 

5. கேடும்பெருக்கமும் இல்அல்ல: நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

The gain and loss in life are not mere accident;
Just mind inflexible in sage's ornament.

115
 
 

6. கெடுவல் யான்என்பது அறிக தன்நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern!

116
 
 

7. கெடுவாக வையாது உலகம் நடுவுஆக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.

117
 
 

8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

To stand, like balance rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of soul, is sages' praise.

118
 
 

9. சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்

Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.

119
 
 

10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.

120