25

13. அடக்கமுடைமை - The Possession of Self-restraint
 

1. அடக்கம் அமரருள் உய்க்கும்: அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்

Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leves him there.

121
 
 

2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்குஇல்லை உயிர்க்கு.

Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!

122
 
 

3. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

If versed in wisdom's lore by virtue's law you self-restrain,
Your self - repression known will yeild you glory's gain.

123
 
 

4. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.

124
 
 

5. எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல்: அவர்உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

To all humility is goodly grace; but chief to them
With fortune blessed,,- 'tis fortune's diadem.

125
 
 

6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.

126
 
 

7. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

What'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bittter tears shall weep.

127
 
 

8. ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டு ஆயின்
நன்று ஆகாது ஆகிவிடும்

Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.

128
 
 

9. தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

In flesh by fire inflamed, nature may throughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth nevermore.

129
 
 

10. கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.

130