3

2. வான் சிறப்பு - The Excellence of Rain
 

1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று.

The World its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.

11
 
 

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

12
 
 

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

If clouds. The promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o’er earth's vast ocean-girdled plain.

13
 
 

4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

If clouds their wealth on waters fail on earth to pour,
The ploughers plough with oxen’s sturdy team no more.

14
 
 

5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

‘Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.

15
 
 

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

If from the clouds no drops of rain are shed,
‘Tis rare to see green herb lift up its head.

16
 
 

7. நெடும்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.

17
 
 

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.

18
 
 

9. தானம்தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம்
வானம் வழங்கா தெனின்.

If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world ceases gifts, and deeds of ’penitence’.

19
 
 

10. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.

20