16. பொறையுடைமை - The Possession of Patience: Forbearance |
| 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை | As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best.
| 151 | |
| 2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று | Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise.
| 152 | |
| 3. இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. | The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.
| 153 | |
| 4. நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும் | Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintain.
| 154 | |
| 5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரை பொன்போல் பொதிந்து | Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.
| 155 | |
| 6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் | Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away.
| 156 | |
| 7. திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று | Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep!
| 157 | |
| 8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் | With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.
| 158 | |
| 9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் | They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure.
| 159 | |
| 10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் | Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain.
| 160 | |
|
|