18. வெஃகாமை - Not Coveting |
| 1. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் | With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door.
| 171 | |
| 2. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவு அன்மை நாணுபவர் | Through lust of gain, no deeds that retribution bring Do they, who shrink with shame from evey unjust thing.
| 172 | |
| 3. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றுஇன்பம் வேண்டு பவர் | No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire.
| 173 | |
| 4. இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மைஇல் காட்சி யவர் | Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need.
| 174 | |
| 5. அஃகி அகன்ற அறிவு என்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் | What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn?
| 175 | |
| 6. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். | Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong.
| 176 | |
| 7. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன் | Seek not increase by greed of gain acquired; That fruit matured yeilds never good desired.
| 177 | |
| 8. அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். | What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine!
| 178 | |
| 9. அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு. | Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed.
| 179 | |
| 10. இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு | From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still.
| 180 | |
|
|