19. புறங்கூறாமை - Not Backbiting |
| 1. அறங் கூறான் அல்லசெயினும் ஒருவன் புறம்கூறான் என்றால் இனிது | Though virtuous words his lips speak not, and all his deeds are ill, If neighbour he defame not, there's good within him still.
| 181 | |
| 2. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன்அழீஇ பொய்த்து நகை | Than he who virtue scorns, and evil deeds perfoms , more vile, Is he that slanders friend, then meets him with false smile.
| 182 | |
| 3. புறம்கூறிப் பொய்த்து உயிர்வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும் | 'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh.
| 183 | |
| 4. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். | In presence though unkindly words you speak, say not, In absence words whose ill result exceeds your thought.
| 184 | |
| 5. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும் | The slanderous meanness that an absent friend defames, 'This man is words owns virtue, not in heart,' proclaims.
| 185 | |
| 6. பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் | Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care,the world will tell.
| 186 | |
| 7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் | With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away.
| 187 | |
| 8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு | Whose nature bids them faults of closest friends proclaim, What mercy will they show to other men's good name?
| 188 | |
| 9. அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை | 'Tis charity, I ween, that makes the earth sustain their load, Who, neighbours' absence watching, tales or slander tell abroad.
| 189 | |
| 10. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கில்பின் தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு | If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man?
| 190 | |
|
|