20. பயனில சொல்லாமை - The Not Speaking Profitless Words |
| 1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் | Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise.
| 191 | |
| 2. பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது | Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more.
| 192 | |
| 3. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. | Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains.
| 193 | |
| 4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து. | Un meaning , worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good.
| 194 | |
| 5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின் | Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense.
| 195 | |
| 6. பயன்இல்சொல் பாராட்டுவானை மகன்எனல் மக்கள் பதடி எனல் | Who makes display of idle words' inanity, Call him not man,- chaff of humanity!
| 196 | |
| 7. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று | Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle word.
| 197 | |
| 8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் | The wise, who weigh the worth of every utterance, Speak none but words of deep significance.
| 198 | |
| 9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசு அறு காட்சியவர் | The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity.
| 199 | |
| 10. சொல்லுக சொல்லில் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல். | If speak you will, speak words that fruit afford; If speak you will, speak never fruitless word.
| 200 | |
|
|