22. ஒப்புரவறிதல் - The Knowledge of what is Befitting a Man's Position |
| 1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு | Duty demands no recompense; to clouds of heaven, By men on earth, what answering gift is given?
| 211 | |
| 2. தாள்ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு. | The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours.
| 212 | |
| 3. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே ஒப்புரவின் நல்ல பிற | To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below.
| 213 | |
| 4. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் | Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place.
| 214 | |
| 5. ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம் பேர் அறிவாளன் திரு | The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies.
| 215 | |
| 6. பயன்மரம் உள்ஊர்ப் பழுத்து அற்றால் செல்வம் நயன் உடையான்கண் படின். | A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart.
| 216 | |
| 7. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் | Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him to large and noble heart.
| 217 | |
| 8. இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர். | E'en when resources fail, they weary not of 'kindness due,' They to whom duty's self appears in vision true.
| 218 | |
| 9. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல்செயும் நீர செய்யாது அமைகலா வாறு | The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none.
| 219 | |
| 10. ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து | Though by 'beneficence' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sum.
| 220 | |
|
|