| 1. ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. | See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain.
| 231 | |
| 2. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் | The speech of all that speak agrees to crown The men that give to those that ask, with fair renown.
| 232 | |
| 3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் | Save praise alone that soars on high, Nought lives on earth that shall not die.
| 233 | |
| 4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. | If men do virtuous deeds by world-wide ample glory crowned, The heavens will cease to laud the sage for other gifts renowned.
| 234 | |
| 5. நத்தம்போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது | Loss that is gain, and death of life's true bliss fulfilled, Are fruits which only wisdom rare can yeild. | 235 | |
| 6. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதுஇலார் தோன்றலின் தோன்றாமை நன்று. | If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your face. | 236 | |
| 7. புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். | If you your days will spend devoid of goodly fame, When men despise, why blame them? You ' ve yourself to blame. | 237 | |
| 8. வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின் | Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men. | 238 | |
| 9. வசைஇலா வண்பயன் குன்றும் இசைஇலா யாக்கை பொறுத்த நிலம். | The blameless fruits of fields 'increase will dwindle down, If earth the burthen bear of men without renown. | 239 | |
| 10. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். | Who live without reproach, them living men we deem; Who live without renown, live not, though living men they seem. | 240 | |
|
|