49

3. துறவறவியல் - Ascetic Virtue

25. அருளுடைமை - The Possession of Benevolence
 

1. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

Wealth 'mid wealth is wealth 'kindliness;
Wealth of goods the vilest too posses.

241
 
 

2. நல்ஆற்றால் நாடி அருள் ஆள்க பல்ஆற்றால்
தேரினும் அஃதே துணை.

The law of 'grace' fufil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.

242
 
 

3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

They in whose breast a ' gracious kindliness ' resides,
See not the gruesome world, where darkness drear abides.

243
 
 

4. மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு இல்என்ப
தன்உயிர் அஞ்சும் வினை.

Who for undying souls of men provides with gracious zeal.
In his own soul the dreaded guilt of sin shall never feel.

244
 
 

5. அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல் மாஞாலம் கரி.

The teeming earth's vast realm, round which the wild winds blow,
In witness, men of 'grace' no woeful want shall know.

245
 
 

6. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார்

Gain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.

246
 
 

7. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி ஆங்கு.

As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot.

247
 
 

8. பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார் மற்றுஆதல் அரிது.

Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose, 'benevolence,' lose all ; nothing can change their doom.

248
 
 

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

When souls un wise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true work of charity.

249
 
 

10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of some stronger foe.

250