3. நீத்தார் பெருமை - The Greatness of Ascetics |
| 1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood.
| 21 | |
| 2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று | As counting those that from the earth have passed away, ‘Tis vain attempt the might of holy men to say.
| 22 | |
| 3. இருமைவகை தெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue’s robe arrayed.
| 23 | |
| 4. உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து | He, who with firmness’ curb the five restrains, Is seed for soil of yonder happy plains.
| 24 | |
| 5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி | Their might who have destroyed ‘the five,' shall soothly tell Indra, the lord of those in heaven’s wide realms that dwell.
| 25 | |
| 6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் | Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew.
| 26 | |
| 7. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு | Taste, light, touch, sound , and smell: who knows the way Of all the five, -the world submissive owns his sway.
| 27 | |
| 8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் | The might of men whose word is never vain, The ‘Secret word’ shall to the earth proclaim.
| 28 | |
| 9. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | The wrath ‘tis hard e’en for an instant to endure, Of those who virtue’s hill have scaled, and stand secure.
| 29 | |
| 10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் | Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue’s son’s the name of ‘Anthanar’ men give.
| 30 | |
|
|