26. புலால் மறுத்தல் - The Renunciation of Flesh |
| 1. தன் ஊன்பெருக்கற்குத் தான் பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் | How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own? | 251 | |
| 2. பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி ஆங்குஇல்லை ஊன் தின்பவர்க்கு | No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger state. | 252 | |
| 3. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். | Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find. | 253 | |
| 4. அருள் அல்லது யாதுஎனில் கொல்லாமை கோறல் பொருள் அல்லது அவ்ஊன் தினல். | 'What's grace, or lack of grace?'To kill' is this , that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfil.
| 254 | |
| 5. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு | If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him,and renders not again. | 255 | |
| 6. தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். | 'We eat the slain,' you say, 'by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy? | 256 | |
| 7. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின். | With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease. | 257 | |
| 8. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊண். | Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave. | 258 | |
| 9. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. | Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share. | 259 | |
| 10. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். | Who slays nought - flesh rejects - his feet before, All living things with clasped hands adore.
| 260 | |
|
|