57

29. கள்ளாமை - The Absence of Fraud
 

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்க தன்நெஞ்சு.

Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.

281
 
 

2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud I will my neighbour of his wealth bereave.'

282
 
 

3. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.

283
 
 

4. களவின்கண் கன்றிய காதல் விளைவின் கண்
வீயா விழுமம் தரும்.

The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.

284
 
 

5. அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

285
 
 

6. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.

286
 
 

7. களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார் கண் இல்.

Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by ' measured wisdom' won.

287
 
 

8. அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.

288
 
 

9. அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர்.

Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.

289
 
 

10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.

290