| 1. வாய்மை எனப்படுவது யாது எனின் யாதுஒன்றும் தீமை இலாத சொலல். | You ask , in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free.
| 291 | |
| 2. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். | Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford.
| 292 | |
| 3. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். | Speak not a word which false thy own heart knows, Self-kindled fire within the false one's spirit glows.
| 293 | |
| 4. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். | True to his inmost soul who lives,-enshrined He lives in souls of all mankind.
| 294 | |
| 5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை. | Greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined.
| 295 | |
| 6. பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும். | No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously.
| 296 | |
| 7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. | If all your life be utter truth, the truth alone, 'Tis well , though other virtuous acts be left undone.
| 297 | |
| 8. புறந்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். | Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.
| 298 | |
| 9. எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. | Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright.
| 299 | |
| 10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற. | Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compare.
| 300 | |
|
|