31. வெகுளாமை - The not being Angry |
| 1. செல்இடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்இடத்துக் காக்கின் என் காவாக்கால் என். | Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein?
| 301 | |
| 2. செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும் இல் அதனின் தீய பிற. | Where power is none to wreak thy wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
| 302 | |
| 3. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். | If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget.
| 303 | |
| 4. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. | Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy?
| 304 | |
| 5. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். | If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him warth shall slay.
| 305 | |
| 6. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும். | Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear.
| 306 | |
| 7. சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்து அறைந்தான் கைபிழையாது அற்று. | The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their warth as noble thing.
| 307 | |
| 8. இணர்எரி தோய்வு அன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. | Though men should work thee woe, like touch of tongues of fire. 'Tis well if thou canst save thy soul from burning ire.
| 308 | |
| 9. உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். | If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires.
| 309 | |
| 10. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. | Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce , equals of all - renouncing sages they.
| 310 | |
|
|