32. இன்னா செய்யாமை - Not doing Evil |
| 1. சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள். | Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure.
| 311 | |
| 2. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள். | Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure.
| 312 | |
| 3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். | Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bring.
| 313 | |
| 4. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன் நயம் செய்து விடல். | To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by.
| 314 | |
| 5. அறிவினான் ஆகுவது உண்டோ பிறதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.. | From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from pain?
| 315 | |
| 6. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். | What his own soul has felt as bitter pain, From making others feel should man abstain.
| 316 | |
| 7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் மாணா செய்யாமை தலை. | To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.
| 317 | |
| 8. தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ மன்உயிர்க்கு இன்னா செயல். | Whose soul has felt as bitter smart of wrong, how can, He wrongs inflict on ever-living soul of man?
| 318 | |
| 9. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். | If, ere the noontide , you to others evil do, Before the eventide will evil visit you.
| 319 | |
| 10. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர். | O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill.
| 320 | |
|
|