33. கொல்லாமை - Not Killing |
| 1. அறவினை யாதுஎனில் கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும் | What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill.
| 321 | |
| 2. பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. | Let those that need partake your meal; guard everything that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives.
| 322 | |
| 3. ஒன்றுஆக நல்லது கொல்லாமை; மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. | Alone, first of good things, is 'not to slay'; The second is, no unture word to say.
| 323 | |
| 4. நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும் கொல்லாமை சூழும் நெறி. | You ask, what is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay.
| 324 | |
| 5. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை | Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who, dreading crime of slaughter, study nought to slay.
| 325 | |
| 6. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல், செல்லாது உயிர்உண்ணும் கூற்று. | Ev'n death, that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill,' uphold with reverent care.
| 326 | |
| 7. தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்உயிர் நீக்கும் வினை. | Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away.
| 327 | |
| 8. நன்றுஆகும் ஆக்கம்பெரிது எனினும் சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை. | Though great the gain of good should seem, the wise, Will any gain by slaughter won despise.
| 328 | |
| 9. கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து. | Whose trade is 'killing'; always vile they show, To minds of them who what is vileness know.
| 329 | |
| 10. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கை யவர் | Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained.
| 330 | |
|
|